கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆயர்வேத வைத்தியர்கள் தங்களின் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய காலநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் நேற்று முன்தினம் (16) வழங்கி வைத்தார்.
இந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட வைத்தியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர்கள் தங்களுக்கான பயிற்சிக் காலங்களில் மருந்து உற்பத்தி நடைமுறை, நிர்வாகம், மற்றும் பதிவேடுகள் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே திருகோணமலை மாவட்ட கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 04 பேரும், மட்டக்களப்பு மாவட்ட சத்திரகொண்டான் மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 03 பேரும், அம்பாறை மாவட்ட மருந்து உற்பத்திப் பிரிவவுக்கு ஒருவர் என்ற வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment