முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் மிஹ்ராஜ் இரவு தினத்தினை 11.03.2021 தெஹிவளை ஜம்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வுகள் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அஷ்ஷேக் ஏ.பி.ஏம் அஷ்ரப் அவா்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதான சொற்பொழிவினை மௌலவி அப்துல் பாயிஸூம், துஆப் பிராத்தனையை பிரதமந்திரியின் முஸ்லிம் சமய இணைப்பாளா் ஹஸன் மௌலானாவும் நிகழ்த்தினாா்கள். இந் நிகழ்வு நேரடியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் நிகழ்ச்சியில் நேரடியாக ஒலிபரப்பட்டது.
மிஹ்ராஜ் இரவு பற்றி எட்டு கவிஞா்களது கவிதைகள் தொகுத்து நுாலகவும் வெளியிடப்பட்டது. அதன் பிரதிகள் பணிப்பாளரினால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment