விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்



பாறுக் ஷிஹான்-
விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்.எனவே விடுதலைப் புலிகளின் காலத்தில் காடுகள் அழிக்கப்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.அது பொய்யான கருத்து.காடுகள் அழிக்கப்பட்டு தான் அவர்களது முகாம்கள் அமைக்கப்பட்டன.அதை யுத்த வெற்றியின் பின்னர் நாங்கள் அவதானித்து இருக்கின்றோம் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இலங்கையில் காடழிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்


எமது நாட்டின் காடுகளை அதிகாரம் இல்லாமல் அல்லது அனுமதி இல்லாமல் அழிப்பதனை நாங்கள் மறுக்கின்றோம்.
காடுகள் இந்த நாட்டுக்கு வளங்களை தருபவையாகும்.எமது நாட்டை பொறுத்தமட்டில் இரண்டு காலநிலைகள் தான் இருக்கின்றன.
ஒன்று கோடைகாலம் மற்றையது மாரி காலம். இந்த மாரி காலத்துக்கு மிக முக்கியமாக இருப்பது காடுகளில் உள்ள மரங்கள் தான்.
ஆனால் இதில் சிலர் அரசியல் செய்வதனை பார்க்கின்றோம். கடந்த காலத்தில் வில்பத்து பகுதியில் ரிசாத் பதியுதீன் காடுகளை அழைக்கின்றார் என்று சொன்னார்கள்.அது கூட ஒரு பொய்யான பல விடயங்களை கொண்ட ஒரு பிரச்சாரமாக இருந்திருப்பதை நாங்கள் காணுகின்றோம்.ஒரு அரசியல்வாதியை முடக்குவதற்காக வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற ஒரு செய்தியாக அல்லது வதந்தியாக இந்த காடழிப்பு இருந்து வந்துள்ளது.

ரிசாத் பதியுதீன் அவர்களது காலத்திலேயே வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டதாக சொன்னபோது நாங்கள் அங்கு சென்று பார்த்தோம் .அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்னர் அங்கு சென்ற பொழுது அவர்களுடைய இடங்கள் காடுகளாக இருந்ததை தான் கண்டோம். ஒரு இடத்தில் வாழ விட்டால் கூட ஐந்து வருடத்தில் அந்தபகுதி காடாகிவிடும் . மனிதர்கள் வாழாத இடங்களில் காடுகளை அழித்து மனிதர்கள் வாழவைக்கின்ற செயல் என்பது தான் மிகவும் அபாரமானதாகும். கடந்த காலத்திலே ஒரு சிலர் சில இடங்களில் இவ்வாறு நடந்து கொண்டதனை நாம் காணுகின்றோம். கடந்த அரசாங்கத்தில் கூட காடுகள் அழிக்கப்பட்டது .இந்த அரசாங்கத்திலும் காடுகள் அழிக்கப்படுவதாக சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன .ஆனால் அவை உண்மையிலேயே அரச அனுமதியுடன் நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடியவில்லை.எனினும் இவ்வாறான காடழிப்புகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்.
விடுதலைப் புலிகளின் பங்கர்களாக இருக்கட்டும் அல்லது அவர்களது முகாம்களாக இருக்கட்டும் எல்லாமே அரசாங்கத்தினால் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு காடுகளுக்குள் தான் அமைந்திருந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அந்தக் காட்டில் ஒரு சிறிய மரங்களை வெட்டாமல் நிச்சயமாக அந்த பங்கர்களையோ அல்லது எதையும் அமைக்க முடியாது.
அவ்வாறு அமைக்காது விட்டிருந்தால் மிக இலகுவாக அரசாங்கம் தனது ராடார் மூலம் கண்டுபிடித்து தாக்குதல் நடாத்தி இருக்கும்.ஆகவே அவர்களது காலத்திலும் கூட காடுகள் அழிக்கப்ட்டது உண்மை.எனவே விடுதலைப் புலிகளின் காலத்தில் காடுகள் அழிக்கப்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.அது பொய்யான கருத்து.காடுகள் அழிக்கப்பட்டு தான் அவர்களது முகாம்கள் அமைக்கப்பட்டன.அதை யுத்த வெற்றியின் பின்னர் நாங்கள் அவதானித்து இருக்கின்றோம் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :