இடமாற்றம் பெற்றுச் செல்லும் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் அவர்களின் சேவைகளை பாராட்டி கல்முனை மக்கள் கெளரவிக்கும் நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸ் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நடைபெற்ற இந் நிகழ்வில் கடந்த மூன்று வருடங்களாக கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்பொழுது இடமாற்றம் பெற்று செல்லும் அல்ஹாஜ் எம். எம் நஸீர் அவர்களின் மக்கள் நல சேவைகளை பாராட்டி கல்முனை மக்கள் சார்பாக பொன்னாடை போற்றப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில் உலமாக்கள், உலமா சபையினர், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment