துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை ரணிதா ஞானராஜாவுக்கு வழங்கும் அமெரிக்க முதற்பெண்மணி டாக்டர். ஜில் பைடன்



இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை ரணிதா ஞானராஜாவுக்கு வழங்கும் அமெரிக்க முதற்பெண்மணி டாக்டர். ஜில் பைடன்

மார்ச் 9, 2021: இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் பெண்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கான ரணிதா ஞானராஜாவின் அர்ப்பணிப்புக்காக துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை வென்றவராக அவரை அமெரிக்க முதற்பெண்மணி டாக்டர். ஜில் பைடனும் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனும் நேற்று கௌரவித்தனர். சட்ட த்தரணியான ரணிதா ஞானராஜா வலிந்து காணாமலாக்கட்டமையினால் பாதிக்கட்ட குடும்பங்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகளிலிருந்து தப்பியவர்கள், மற்றும் மத மற்றும் இன ரீதியான சிறுபான்மையினர் உட்பட இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து செயற்படுகிறார்.

இராஜாங்க செயலாளரின் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதானது, சமாதானம், மனித உரிமைகள், மற்றும் பெணிகளின் வலுவூடுட்டலுக்காக ஆதரித்து குரல்கொடுத்து செயற்படுவதில் விதிவிலக்கான துணிச்சலையும் தலைமைத்துவதையும் வெளிப்படுத்தும் உலகம் முழுவதிலுமுள்ள பெண்களை பாராட்டுவதற்காக 2007 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விவகாரங்களின் பரந்த அளவொன்றை உள்வாங்கி இலங்கையிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு நீதியை அடைவதற்கான முயற்சிகளுக்கு தமது தொழில் வாழ்க்கையை ரணிதா ஞானராஜா அர்ப்பணித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்படுள்ள கைதிகளுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்படுபவர்களாக நம்பப்படும் உறவினர்களின் நிலையை அறிந்துகொள்ள முயற்சிக்கும் குடும்பங்களுக்கும் அவர் இலவச சட்ட உதவியை வழங்குகிறார். பாதிக்கப்படடுபவர்களை மையமாகக் கொண்டு அணுகுமுறையொன்றுக்கான அவரது தலைமைத்துவமும் வாதமும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் பல குடும்பங்களுக்கு உதவியுள்ளது. பாலின அடிப்படைடுயிலான வன்முறைகளை எதிர்த்து செயற்படும் மற்றும் காணி மற்றும் சொத்துகளுக்கு பெண்களின் சம உரிமைகளுக்காக வாதிடும் அடிமட்ட அமைப்புகளின் ஆற்றலை கட்டியெழுப்புவதற்கும் அவர் அயராது உழைத்துள்ளார். உதாரணமாக, துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கான பெண்களின் திறனை தடுத்துள்ள பொலிஸ் நிலையங்களிலான குறைபாடுகளை ரணிதா ஞானராஜாவின் வீட்டு வன்முறைகள் தொடுர்பான ஆராய்ச்சி அடைடுயாளம் கண்டுள்ளது. பெண்களின் காப்பிடங்கள், ஆலோசனை சேவைகள், மற்றும் வீட்டு வன்முறைகளில் இருந்து தப்பியவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றுக்கான அணுகலை அதிகரித்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கும் அவர் தலைமை தாங்குகிறார்.
'ரணிதா ஞானராஜா தமது அனைத்து சக பிரஜைகளின் சார்பாகவும் நீதிக்கான மிகப்பெரிய அர்ப்பணிப்பொன்றை வெளிப்படுத்தியுள்ளார். தமது நாட்டின் மிகவும் பாதிக்கப்படுக்கூடிய மக்கள் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெற அவர் உதவியுள்ளதுடன், அவ்வாறு செயற்படுவதானது இலங்ககையிலும் சரி உலகெங்கிலும் சரி துணிச்சலின் முன்மாதியாகும்,' என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி.
டெப்லிஸ்ட் தெரிவித்தார்.
தங்களது சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட TBC பெண்கள் மத்தியில் ரணிதா ஞானராஜாவும் ஒருவராக இருந்தார். இதன் பின்னர், அமெரிக்க பல்கலைக்கழகங்கள், வணிகங்கள், மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளுடுன் இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு International Visitor Leadership Program (IVLP) மெய்நிகர் பரிமாற்றங்களில் (virtual exchanges) இந்த தனிச்சிறப்புடைய பெண்கள் பங்கு கொள்வார்கள். கடந்த 15 வருடங்களில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 75 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 155 இற்கும் அதிகமான துணிச்சலுக்கான சர்வதேச பெண்களை அங்கீகரித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :