அஹமட் சாஜித் -
மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, காரைதீவு ஆகிய மூன்று ஊர்களும் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட ஊர்களாகும். காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக கௌரவ ஜெயசிறில் காணப்படுகின்றார்.
பல வருடங்கள் கழித்து இம்முறையே மாவடிப்பள்ளி மக்களின் கனவாக இருந்த பிரதேச சபை உறுப்பினர் என்ற ஆசை நிறைவேறி இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மக்களின் ஆதரவின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ ஜலீல் அவர்களும், போனஸ் ஆசனம் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ ரணீஸ் ஆகியோர் பிரதேச சபையின் மாவடிப்பள்ளி உறுப்பினர்களாக அலங்கரிக்கின்றனர்.
மாவடிப்பள்ளியை ஊடருத்துச் செல்லும் பிரதான பாதையானது அம்பாறை கல்முனைப் பிரதான பாதையாகும். இந்தப் பாதையினாலே 24 மணித்தியாலமும் போக்குவரத்து சேவை அரச தனியார் பஸ்கள் பயணித்தல், அம்பாறை கல்முனை அம்பியூலன்ஸ்கள் பயணித்தல், மக்கள் தங்களது அன்றாட கடமைகளுக்காக, அத்தியவசிய தேவைகளுக்காக, அவசர வைத்தியத் தேவைகளுக்காக பிரயாணங்களை மேற்கொள்கின்றனர். இது ஒரு மத்திய பிரதான மார்கப் பாதையாக அம்பாறை மாவட்ட மக்களுக்க திகழ்கின்றது.
அதிலும் குறிப்பாக மாவடிப்பள்ளி சியாறம் இருந்து காரைதீவு முச்சந்தி வரையான சின்னப் பாலம், பெரிய பாலம் காணப்படும் பகுதியானது இரு மரங்களிலும் வயல் வெளியினால் சூழப்பட்டு மாவடிப்பள்ளி ஆறும் காணப்படுகிறது. இப் பகுதியானது இருள் சூழ்ந்து காணப்படுவதால், வயல் அறுவடை நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பதனாலும், ஆற்றிலிருக்கும் முதலைகள் இரவு நேரங்களில் நடு வீதிக்கு வருவதனாலும் நாளாந்தம் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதுடன், வீதியினால் பயணம் செய்வோருக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், வயல் வேலை செய்வோருக்கு பல்வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தி வந்தது.
கடந்த நல்லாட்சியில் நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த கபீர் காசிமினால் நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காரைதீவு முச்சந்தியிலிருந்து மாவடிப்பள்ளி சியாரம் வரையான பகுதிக்கு மின்கம்பம் அமைத்து LED மின் விளக்குகள் பொருத்தி அலங்கரிக்கப்பட்டு ஒளிரவைத்து காரைதீவு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது. இதனால் அவ் வீதியில் பயணிப்போர் எந்த தடங்கள், தடையின்றி தங்களது பயணங்களை மேற்கொள்வதுடன், வயல் வேலை செய்வோருக்கும் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.
இருந்தும் கடந்த ஒரு மாதகாலமாக குறித்த மின் விளக்குகளானது காரைதீவு முச்சந்தியிலிருந்து பெரிய பாலம் வரையான காரைதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டும், பெரிய பாலம் இருந்து மாவடிப்பள்ளி சியாரம் வரையான மாவடிப்பள்ளிப் பிரதேச மின் விளக்குகள் ஒளிரவிடப்படாமலும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இது சம்மந்தமாக தவிசாளருக்கு தொலைபேசி மூலமும், பிரதேச சபை சென்றும் பல்வேறு முறைப்பாடுகள் செய்தும் தீர்வளிக்கப்படவில்லை. #இது_தவிசாளரினால்_மாவடிப்பள்ளிக்கு_வழங்கப்படும்_ஊர்_வேற்றுமையா..!
இது சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ #ஜலீல் அவர்களிடம் வினவிய போது அவர் கூறிய கருத்து..!
குறித்த பகுதிக்கான மின் விளக்குகள் ஒளிரவிடப்படாது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதானது மின் கட்டணத்தை காரைதீவு பிரதேச சபை செலுத்தாமையினால் மின்சார சபையினால் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், இது சம்மந்தமாக தவிசாளரிடமும், பிரதேச சபை செயலாளரிடமும், ஜனவரி மாத அமர்விலும் எமதூர் மக்களினதும் எனது முறைப்பாட்டையும் விடுத்து, இதனால் பல ஊர் மக்கள் பிரயாணம் செய்கின்றனர், எதிர்வரும் மாதத்தில் அறுவடையும் இடம்பெற இருப்பதால் யானைகளின் அட்டகாசம் அதிகரிக்கும், பிரயாணம் செய்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கக் கூடும் மின் விளக்குகளை ஒளிரவிடுங்கள் எனத் தெரிவித்தும், இதற்கு பதிலளித்த தவிசாளர் மின் கட்டணத்தை செலுத்த பிரதேச சபையில் பணமில்லை எனத் தெரிவித்ததாக கூறினார்.
ஆனால் ஒவ்வொருவருடமும் பொதுச் சந்தையில்லாத மாவடிப்பள்ளிக்கு இறைச்சிக்கடை நடாத்துவதற்கு விலை மனுக்கோரல் விடப்பட்டு 25 இலட்சம் ரூபாய்க்கு கொண்டு சென்று பணம் அறவிடப்படுகிறது.

பொதுச் சந்தை இல்லாத ஊருக்கு விலைமனுக்கோரல் விடப்பட்டு இறைச்சிக்கடை நடாத்த அனுமதி வழங்க எந்த சட்டத்தில் உள்ளது என்பது மாயம் மந்திரம்..?
அது போல கோழி இறைச்சிக்கடை, சில்லரைக் கடை போன்றனவற்றுக்கெள்லாம் வருடா வருடம் பணம் அறவிடுகிறீர்கள், கொண்டாட்டம் நடாத்துகிறீர்கள்.

அவசியத் தேவையான மின் விளக்கின் மின் கட்டணத்தை செலுத்தி எங்கள் ஊரைப் பாதுகாப்பதற்கு தவிசாளரும், பிரதேச சபையும் பின் வாங்குவது ஏன்..? மாவடிப்பள்ளியை வேறு பிரதேச சபைக்குட்படுகிறது என பிரிக்கிறீரா அல்லது இனத்துவேசமா???
கடந்த பெப்ரவரி மாதம் 09 ம் திகதி மாவடிப்பள்ளி மேற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தவிசாளரிடம் மக்கள் இதே முறைப்பாட்டை இட்ட போது, அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றது மின் விளக்குகள் ஒளிரும் என்று வாக்களித்தார். இன்னும் 3 நாட்கள் முடியவில்லையா? இல்லை மக்களை மடையர்களாக்க விடுத்த போலி வாக்குறுதியா???
நேற்றைய விபத்து..!
நேற்று மாவடிப்பள்ளி சின்னப்பாலத்திற்கு அருகில் ஒருவர் விழுந்து காயங்களுடன் இருளில் காணப்பட்டார். அவரை தூக்கி சரி செய்து முதலுதவி வழங்கிய பின் என்ன நடந்தது என வினவ இருளில் முதலை ஒன்று குறுக்காகப் பாய்ந்ததால் மோட்டார் வண்டி சருகி கீழே விழுந்தேன் என்றார். மின்விளக்குகள் ஒளிருமானால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுமா?
யானைகளின் நடமாட்டம்..!
அறுவடை இடம்பெற்றுவருவதனால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இருளாக காணப்படும் இப் பகுதியில் எந்த மூளையில் இருந்து யானை தாக்கும் என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதால் பிரயாணம் செய்வதற்கு பயப்படுகின்றனர். அவசர வைத்தியத் தேவைகளுக்கு செல்வதாயின் எமதூர் மக்கள் வானத்தினால் பறந்தா செல்வது..?
மின்விளக்குகள் ஒளிரப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுமா?
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரே..!
எமது ஊர் மக்களின் ஏக்கமும், வேதனையும் உங்களுக்கு புரியவில்லையா?? இன்னும் அமைதியாக இருந்து எமது மக்களை ஏமாற்றப் போகிறீர்களா??? நீங்கள் தவிசாளராக எமதூரின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வாக்களித்தாரே! இது நினைவில்லையா???
பிரதேச சபை உறுப்பினர்களே, எமதூரிலிருந்து பிரதேச சபைக்கு சென்ற அ.இ.ம.காங்கிரஸின் உறுப்பினர் ஜலீல் அவர்களே, தற்போதைய தவிசாளரைப் பெற ஆதரவளித்த மு.கா வின் உறுப்பினர் ரணீஸ் அவர்களே..! இம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

0 comments :
Post a Comment