முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வரும், முன்னாள் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் MC.அஹ்மத் M.P அவர்களின் பேரனுமான றிஸ்லி முஸ்தபா அவர்கள் சென்ற பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் வழங்கிய வாக்குறுதிகளை அண்மைக்காலமாக நிறைவேற்றி வருகின்றார்.
அந்த வகையில் மிக நீண்டகாலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இருந்த மேற்படி கடற்கரை வீதிகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான கோப்புகளை தயாரித்து உரிய அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொண்டு சென்றதன் பலனாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் அன்மையில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் றிஸ்லி முஸ்தபா அவர்களின் செயலாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி பாலம் மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிப் பாலம் போன்றவையும் இத்திட்டத்தின்கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையை வழங்காவிட்டாலும் தனது தந்தை மற்றும் பாட்டனார் ஆகியோரின் கனவுகளை நனவாக்க எதிர்காலத்தில் இதுபோன்ற பல வேலைத்திட்டங்களை அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் துறைசார்ந்த அமைச்சர்களை அம்பாறை மாவட்டத்தின் சகல பிராந்தியத்துக்கும் அழைத்து வந்து இவ் விடயங்களை ஆராய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment