திருகோணமலை மாவட்டத்தில் காடழிவை தடுக்கும் நோக்கில் மாவட்டத்தின் பல இடங்களில் அறிவுறுத்தல் பதாதைகள் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் குச்சவெளி பிரதேசத்தில் நடைபெற்றது.
பொதுமக்கள் சட்டவிரோத காடழிப்பு நடைபெறுவதனை கண்டால் குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 0707011116 துரித இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.இதன் மூலம் காடழிவை உடன் தடுத்து நிறுத்தி சட்டத்தின் முன் உரியவர்களை நிறுத்தி சுற்றாடலை பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment