ஊடகத்துறை, அரசியல் என்பது முழுமை பெறுவதற்கு சமூகம் நன்மை அடைவதனால் ஆகும்



பாறுக் ஷிஹான்-
டகத்துறையை நீங்கி வந்தமை விவாகரத்து பெற்ற மனைவியை ஒரு பொது இடத்தில் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் முதுநபீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகத்துறையை நீங்கி வந்தமை விவாகரத்து பெற்ற மனைவியை ஒரு பொது இடத்தில் சந்திக்கின்றேன் என்ற உணர்வு என்னுள் இருக்கின்றது.விவாகரத்து பெற்ற மனைவி என்று நான் கூறுவது ஊடகத்துறை ஆகும்.கணவன் என்று கூறுவது பாராளுமன்றம் என்ற பதவியாகும்.மனைவியும் கணவனும் பிரிந்தது ஒரு பிள்ளையை தொலைத்து விட்டோம் என்பதற்காகும்.பிள்ளை என்று நான் கூறுவது எமது சமூகம் ஆகும்.ஊடகத்துறை அரசியல் என்பது முழுமை பெறுவதற்கு சமூகம் நன்மை அடைவது தான் காரணம் என நான் நினைக்கின்றேன்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :