தேசியக்கொடியை அவமதித்த "அமேசனை" உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யுங்கள் : அரசுக்கு வேண்டுகோள் !



ணைத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமொன்றான அமேசனானது, இலங்கை தேசியக்கொடி பொறிக்கப்பட்ட பாதணி மற்றும் காற்துடைப்பான்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ள விடயமானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிறுவனத்தை இலங்கையில் தடைசெய்ய இலங்கை அரசு உடனடியாக முன்வர வேண்டும் என அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா வின் சார்பில் அவ்வமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் யூ. எல். நூருள் ஹுதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அரசுக்கு பகிரங்க வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் குறித்த நிறுவனமானது தமது இணையத்தில் 20 அமெரிக்க டொலருக்கு குறித்த பாதணிகளையும் காற்துடைப்பானை 20.20 டொலர்களுக்கு விற்பனைக்கும் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எமது நாட்டின் கொடியை இவ்வாறு அவதூறு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளதானது இலங்கையர்கள் அனைவரது மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வாரு நாடும் தமது தேசியக்கொடியை மரியாதைக்குரிய சின்னமாக கொண்டுள்ளன. அதே போன்றே இலங்கையர்களும் தமது தேசிய கொடியை மரியாதைக்குரிய விடயமாக கொண்டுள்ளனர். அவ்வாறான ஒன்றுக்கு அபகீர்த்தியை உண்டாக்கிய அந்த நிறுவனத்திற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து இலங்கையில் அவர்களின் தொழிற்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மிகப்பெரும் தொகையை அபராதமாக விதிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :