முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நாளை (08) வியாழக்கிழமை, அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீல.சு.க. யை மறுசீரமைத்து, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இவ்விஜயத்தின்போது, அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.க. நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களையும், ஸ்ரீல.சு.க. முன்னாள் மற்றும் இந்நாள் போராளிகளையும், ஆர்வலர்களையும், கட்சி உறுப்பினர்களையும், பேரபிமானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எடுக்கப்படவேண்டிய பிரதான நடவடிக்கைகள் மற்றும் பங்களிப்புக்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment