ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இதுபோன்ற கடுமையான நடவடிக்கை மூலம், அமைப்புகளுக்கு தடை விதிப்பது கவலைக்குரிய விஷயமாகும். அரசின் சர்ச்சைக்குரிய இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் தெளிவற்றவையாகவும், அரசியல் எதிர்ப்பிற்கு எதிராக மாநில அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது. ஒரு ஜனநாயக தேசத்தில், ஜனநாயக வழிமுறைகள் மூலம் மாநில அல்லது மத்திய அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் சகித்துக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
எதிர்கருத்துகளை ஒடுக்க அரசு வலிமையோடு நடந்து கொள்ள முடியாது என்பது பாப்புலர் ஃப்ரண்டின் கருத்து. சமுதாயத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படுவதற்கான இடத்தை மறுப்பது என்பது நம்முடைய நேசத்துக்குரிய ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பு , சட்டவிரோதமாக ஏதாவது செய்ததாக அரசாங்கத்திற்கு ஆதாரங்கள் இருந்தால், அது தனது வழக்கை நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிரூபித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக இத்தகைய அடக்குமுறை நடவடிக்கை குழப்பத்தையும், ஜனநாயக சமுதாயத்திற்கு தீங்கையும் விளைவிக்கும்.
தெலுங்கானா மக்கள் பாஜகவை சட்டசபையில் ஒரே ஒரு சீட்டுடன் நிராகரித்திருந்தாலும், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களை கையாள்வதில் பாஜக அரசாங்கத்தின் அதே அடக்குமுறை கொள்கைகளை தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசு பின்பற்றுகிறது என்பது துரதிருஷ்டவசமானது. எனவே அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய தெலுங்கானா அரசாங்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment