எறாவூர் மாதர் அபிவிருத்தி நிலையத்தின் 2020 ஆண்டு பயிற்சி மாணவிகளது கண்காட்சி நிகழ்வு

ஏறாவூர் சாதிக் அகமட் -

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாதர் அபிவிருத்தி நிலையத்தின் 2020 ஆண்டு பயிற்சி மாணவிகளது ஆக்கங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது,

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்
நா. தனஞ்ஜெயன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
க. மோகன்பிறேம்குமார், ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் A. C அஹமட் அப்fகர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்
 ஹண்சூல் சிஹாணா , கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பத்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்வினை ஏறாவூர் நகர கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மு. அகிலேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் றிம்ஷியா அவர்களின் நெறிப்படுத்தலில் தையல் போதணாசிரியை நஸ்ரின் அவர்களின் வழிகாட்டுதலில் 2020 ஆண்டு பயிற்சி மாணவிகளால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அகிலண் ஆடியோர் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் நா தனஞ்ஜெயன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எங்களது மாகாணத்தில் 43 மாதர் அபிவிருத்தி நிலையங்களில் இவ்வாறான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் பல ஆயிரம் மாணவிகள் பயிற்சி பெற்று வருடம் தோறும் வெளியேறுகிறார்கள்.

 இந்த பயிற்சி நிலையத்தில் சராசரியாக 40 மாணவிகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் அணைவரும் தாங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சிகள் மூலம் தங்களது தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்பவர்களாக இல்லாமல் சமூகத்திற்கு தேவையான அளவு இவ்வாறான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வர்களாக மாற வேண்டும் அப்போது தான் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைவதுடன் நீங்களும் உங்களது பொருளாதாரத்தை வளப்படுத்த முடியும் மேலும் உங்களது உற்பத்திக்கான இணையவழி சந்தை வசதிகளும் எமது திணைக்களத்தினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது அவற்றையும் நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :