பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி அதிபர். திரு.எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் , எதிர்காலத்தில் க.பொ.த . உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் போது தங்களுக்குரிய பாடத் தெரிவுகளை தேர்ந்தெடுத்தல் சம்பந்தமான ஆலோசனையும் வழிகாட்டலும் இன்று ( 7 ) கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி ஆசிரியர்களான திரு. எஸ்.பி.சுதர்சன் , திரு.வீ.அருணாகரன் , திரு.எஸ்.கவியரசன் , திரு.ரீ.கோகுல்ராஜ் ஆகியோர் இந.நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையின் எதிர்காலஉயர்தர பரீட்சை முடிவுகள் சிறப்பாக அமைவதுடன் , அதிகளவிலான மாணவர்கள் பல்துறையிலும் பல்கலைக் கழக அனுமதி பெறும் வீதத்தை அதிகரிக்கச் செய்வதுடன் , நாட்டுக்கும் , சமூகத்திற்கும் , பிரதேசத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளையும் உருவாக்குவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :