மட்டக்களப்பில் குறுந்திரைப்பட பயிற்சிப் பட்டறை..!! 2021

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதன் முதலாக 2021ஆம் ஆண்டிற்கான குறும்பட பயிற்சி பட்டறை கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு பிள்ளையாரடி விதாதா வள நிலையத்தில் ஆரம்பமாகி 7ம் 8ம் திகதிகளில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட குறுந்திரைப்பட செயற்பாட்டாளர்களும் ஆர்வலருமான கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த குறும்பட பயிற்சி பட்டறை திணைக்கள பணிப்பாளர் திரு.சரவணமுத்து நவநீதன் தலைமையில் ஆரம்பமானது.

குறித்த பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சுஜாதா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதோடு இந்நிகழ்வில் முதல் நாளன்று
ஓன்பது ரூபாநோட்டு, தென்றல், ஆடுகளம், வடசென்னை போன்ற இந்திய திரைப்படங்களின், உதவி இயக்குநர் A. L ஹசீன் அவர்கள் கிழக்கின் மிகச்சிறந்த பல்துறை ஆளுமை எழுத்தாளர் திரு. உமா வரதராஜன் ஆகியோரின் விரிவுரை நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

குறுந்திரைப்பட பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் அமர்வின் வளவாளர்களாக உரு திரைப்படம் மற்றும் புங்குடுதீவு ஆவணப்பட இயக்குநர் திரு. காசிநாதர் ஞானதாஸ் அவர்களும் மற்றும் இந்தியாவில் சினிமா துறையில் பட்டப்படிப்பை(ஒளிப்பதிவாளன்) மேற்கொண்ட பிரதீபன் செல்வன் ஆகியோர் வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக விரிவுரைகள் இடம் பெற்றது

இப் பயிற்சி பட்டறையில் உலகில் பல்வேறு மொழிகளிலும் முக்கியமான குறும்படங்கள் சில திரையிடப்பட்டதோடு எமது கலைஞர்களின் குறும்படங்களும் திரையிடப்பட்டது மேலும் விரிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த இப்பயிற்சிப் பட்டறை அம்பாறை மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

இதன் 2ம் நாள் நிகழ்வு இடம்பெற்று பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி பாரதி கெனடி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வின் பொது மட்டக்களப்பு திரைப்பட கலைஞர்களுக்கான ஒரு சங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் கிழக்கிலிருந்து பல்வேறு சிறந்த குறுந்திரைப்படங்கள் வெளிவர சிறந்த களமாக இது எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :