4 ஹெலிகளை வாங்கும் இலங்கை-அவசர தீர்மானம்



J.f.காமிலா பேகம்-
ஷ்யாவின் உற்பத்திகளில் ஒன்றான எம்.ஐ-171 ரக 04 ஹெலிகொப்டர்களை விரைந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையணிக்கு வாடகைக்கு விடுவதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்ற வகையில், இந்த ரக ஹெலிகொப்டரின் விலை ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் என்ற (Rosoboron export) ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து ஹெலிகொப்டர் கொள்வனவை செய்யவும் பாதுகாப்பு அமைச்சின் கவனம் திரும்பியிருக்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் குறித்த ரஷ்ய நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக எம்.டி.வி நிறுவனத்தின் சொந்தக்காரரான கிலி மஹராஜாவின் மஹாராஜா நிறுவனமே இயங்கிவந்தது.

2400 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்தி மேற்படி ரஷ்ய நிறுவனத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட கப்பலொன்றை கொள்வனவு செய்யவும் இரகசிய கொடுக்கல் வாங்கலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவே அப்போதைய ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

எவ்வாறாயினும் அப்போதைய எதிர்ட்சியினர் இன்றைய ஆளுங்கட்சியிலுள்ள நிலையில், ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தற்போதைய இலங்கைப் பிரதிநிதியாக ராஜபக்ஷவினரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஊடாக BTR 82A ரக 60 ஆயுத வாகனங்களையும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :