அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்கு செய்திருந்த ஏ டிவிசன் உதைபந்தாட்ட தொடரில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்திற்கும் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையிலான நொக் அவுட் முறையிலான போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்றது.
இப்போட்டியில் கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகம் 5-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை சனிமெளண்ட் விளையாட்டு கழகத்தின் சார்பில் ஏ.டபிள்யூ.எம்.றிபாஸ் 2 கோல்களையும் , ஏ.ஆர்.எம்.பிரோஸ் , ஏ.எஸ்.எம்.சஜீன் ஆகியோர் தலா ஒரு கோலையும் புகுத்தி கழகத்தின் வெற்றிக்கு வழியமைத்தனர்.
0 comments :
Post a Comment