திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் 50 மில்லியன் ரூபாயில் ஓரு கட்டிடத்தினை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வேலைத்திட்டத்தினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இக்கட்டிடம் அமையவிருக்கும் இடத்தினை பார்வையிடுவதற்காக வேண்டி புதன்கிழமை(31)சென்று பார்வையிட்டார்கள்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா, பிராந்திய பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரேம், கிண்ணியா வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ஜிப்ரி, கட்டிடத் திணைக்கள மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் சந்திரமோகன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment