அண்மை காலத்தில் எம்மை விட்டும் மறைந்த கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, கவிஞர் ஏ. எம். எம். அலி, வகவ கவிஞர் பாணந்துறை நிஸ்வான், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், துபாய் சங்கமம் தொலைக்காட்சி நிறுவுனரும் வகவ கவிஞருமான கலையன்பன் ரபீக், எம். எம். எம் நூறுல் ஹக் ( வகவ கவிதாயினி கமர்ஜான் பீபியின் கணவர்), மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, சிங்கள தமிழ் கவிஞர்களின் இணைப்புப் பாலமாக திகழ்ந்த வதாகொட நவரத்ன, பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல், வகவ கவிஞர் பாரதி சித்தன் (ரெங்கநாதன்), பிரபல பத்திரிகையாளர் ஷண் (சஞ்ஜயன்) ஆகியோருக்கு மௌனப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.
ஞானம் சஞ்சிகை நடாத்திய செம்பியன் செல்வன் சிறுகதை போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற வகவ சிரேஷ்ட ஸ்தாபகர் சத்திய எழுத்தாளர் கலாபூஷணம் நாகூர் கனி அவர்களுக்கு வகவம் பாராட்டுத் தெரிவித்தது. அத்துடன் அண்மையில் "வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்குது" என்ற கவிதை நூலை வெளியிட்ட வலம்புரி கவிதா வட்டத்தின் இளங் கவிஞர் எ.எம்.எம். அனஸுக்கும் வகவம் பாராட்டைத் தெரிவித்தது. நூல் வெளிவர பெரிதும் காரணமாக இருந்த அல் ஹிக்மா கல்லூரி அதிபர் கவிஞர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கும் வகவம் தன் நன்றியைத் தெரிவித்தது.
உலக கவிதை தினத்தையொட்டிய வலம்புரி கவிதா வட்டத்தின் 72 ஆவது கவியரங்கு அரங்கை கலகலப்பாக்கியது.
முன்னாள் தினகரன் வாரமஞ்சரி "கவிதைப் பூங்கா" தயாரிப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையகச் சேவை " வசந்த வாசல் " கவிதை நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான கவிஞர் ரஷீத் எம். றியாழ் கவியரங்கிற்கு தலைமை தாங்கி தனக்கே உரித்தான பாணியில் கவிதை மழை பொழிந்து அவையின் பாராட்டைப் பெற்றார். மிகவும் கோலாகலமாக நடந்த கவியரங்கில்
கவிஞர்கள்:
1. கலாபூஷணம் மஸீதா அன்சார்
2. மலாய் கவி டிவாங்ஸோ
3. அப்துல் அஸீஸ்
4. கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன்
5. அக்ஷியா லைலா
6. மௌலவி காத்தான்குடி பௌஸ்
7. இளங்கோ சுதாகர் - மகள் கலைநிலா
8. கிண்ணியா அமீர் அலி
9. எம். பாலகிருஷ்ணன்
10. இலங்கை பொன்மனச் செம்மல் தாஜ்மஹான்
11. ரவூப் ஹஸீர்
12. அவிஸ்ஸாவெல்ல சிவராஜன்
13. பாத்திமா மைந்தன் அன்சார்
14. சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்
15. உணர்ச்சிப் பூக்கள் ஆதில்
16. எஸ். தனபாலன்
17. தமிழ்த் தென்றல் அலி அக்பர்
18. எ.எம்.எம். அனஸ்
19. வை. சுசீலா
20. வாழைத் தோட்டம் எம். வஸீர்
21. கம்மல்துறை இக்பால்
22. காவ்யாபிமானி கலைவாதி கலீல்
23. ஏ.எம்.எஸ். உதுமான்
ஆகியோர் தங்கள் வித்தியாசமான கவிதைகளால் சபையை ஆகர்ஷித்தனர். கலைஞர் இளங்கோவின் மூன்று வயது மகள் கலைநிலா தந்தையின் கவிதையைப் பாடி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களுக்கான சிறந்த களமாக வகவ மேடையிருப்பதை பல கவிஞர்கள் வாயார கூறி மகிழ்ந்தனர். அவர்கள் கவிதா தாகத்தோடு எப்போது வகவ மேடை கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தமை நான்கு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற கவியரங்கில் கலந்து கொள்ள அவர்கள் காட்டிய ஆர்வம் வெளிக்காட்டியது.
பிரபல பத்திரிகையாளர் எம். ஏ. எம். நிலாம் (ஈழத்து நூன்), மணவை அசோகன், கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னா, கவிஞர் கனிவுமதி, ஒளிபரப்பாளரும் கவிஞருமான ஏ. எம். அஸ்கர், ஏ. ஈ. கவிதா, இரா. சிவராஜா, கவிக்கமல் ரஸீம், எஸ். முத்துக்குமார், கவிதாயினி ரி. என். இஸ்ரா, சேம், கலாபூஷணம் நூருல் அயின், நூருல் ஷிபா சாஹிர், ஆர். எம். ரிபாத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
( நன்றி - புகைப்பட உதவி கவிஞர் உணர்ச்சிப் பூக்கள் ஆதில்)
0 comments :
Post a Comment