8000 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தில் சுமார் 8000 ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மே மாத இறுதிக்குள் விதைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :