இந்துக்களின் வாழ்வியலில் சமயச்சடங்குகள் இரண்டறக்கலந்தவை. அண்மைக்காலமாக இரு பஞ்சாங்கங்களின் வேறுபட்ட கணிப்புகள் சமயசடங்குகளில் மற்றும் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றுக்கு மத்தியில் நாம் ஒற்றுமைகாணவேண்டிய அவசியம் புத்தாண்டில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் சமுகஆர்வலர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள பிலவ வருட புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளது.
வெளியிட்டுள்ள குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்ப்புத்தாண்டு 'பிலவ' வருடம் என்ற பெயரில் இன்று 14ஆம் திகதி உதயமாகிறது. தமிழர்களின் 60வருட சுழற்சியில் இது 35ஆவது வருடமாகும்.
வானியல் தொடர்பான அத்தனை கணிப்புகளையும் தமிழர் அன்றே செய்திருந்தனர். அவை பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று விஞ்ஞானிகள் கூறிடும் சந்திரகிரகணம் சூரிய கிரகணம் போன்றவற்றை அன்றே தமிழர்கள் மிகவும் துல்லியமாகக்கணித்திருந்தனர். இன்றும் அவற்றை பஞ்சாங்கத்தில் காணலாம்.
பஞ்சாங்கத்தின்படிதான் தமிழர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை இடம்பெறும் சகல சடங்குகள் கிரியைகளையும் கணிப்பார்கள். நாமகர்ணம் எனப்படும் பெயர் வைப்பது தொடக்கம் திதி வரை அனைத்தும் பஞ்சாங்கத்தில்தான் பார்ப்பதுண்டு.
எனவே சனாதனதர்மமாம் இந்துசமயத்தின்பால் பாரம்பரியமாக அறப்பணிசெய்துவரும் இந்துகலாசாரத்திணைக்களம் தற்போது புதுப்பொலிவுபெற்று இந்துஅறநெறிப்பரட்சியினை ஏற்படுத்திவருகிறது.இலங்கைத்திருநாட்டில் மேலும் சமயப்பணிகளை முன்னெடுக்க வாழ்த்துகின்றோம்.
பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் காலத்தில் காலத்தில் நாட்டில் இந்துசமயம் மேலும் மறுமலர்ச்சி காணவேண்டும். ஆலயங்கள் புதுப்பொலிவோடு இயங்கவேண்டும்.
சமய விழாக்கள் விரதங்கள்பண்டிகைகள் உரிய காலத்தில் நடைபெற ஒத்துழையுங்கள். அவரது காலத்தில் இருபஞ்சாங்கமுரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்துசமயிகள் மத்தியில் மேலும் நம்பிக்கையுடன்கூடிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்.
0 comments :
Post a Comment