சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்துள்ளார்-முபாரக் மஜீட் வீடியோ

பாறுக் ஷிஹான்-

ஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை(12) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.காத்தான்குடி பகுதியில் குழப்பவாதியாக இருந்த சஹ்ரானுக்கு கைகொடுத்து தேர்தல்காலங்களில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்ததை நாம் கண்டிருந்தோம்.

அவ்வாறு பிழைகளை செய்து விட்டு கூலிக்கு செயற்பட்ட சஹ்ரான் குழு உருவாகுவதற்கு சமூகம் உள்ளவர்கள் தான் காரணம் என கருத்துக்களை அவர் பரப்புவதை ஏற்கமுடியாது.இவரது பேச்சுக்களை பார்க்கின்ற போது அவருக்கு சரியான விளக்கங்கள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.வழமையாகவே ரவூப் ஹக்கீம் பேசுகின்ற போது என்ன பேசுகின்றார் என்பது யாருக்கும் புரியாது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :