காரைதீவில் அமுலுக்குவரும் கொரோனாத்தடுப்பு வழிமுறைகள்!



காரைதீவு சகா-
கொவிட் 19 மற்றும் டெங்கு பாதுகாப்பு தொடர்பான உள்ளக அவசரக் கூட்டமொன்று நேற்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பஷீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு பொது சுகாதார பரிசோதகர் நுளம்பு தடுப்பு பிரிவினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் சில வருமாறு

முக கவசம் அணிந்து செல்லுங்கள் சமூக இடைவெளியை பேணி நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் ஒன்றுகூடலை தவிர்த்துக் கொள்ளுங்கள்.( சன நெரிசலான இடங்களைத் தவிர்ப்போம்)

இளையோர் முதியோர் உட்பட சிறு குழந்தைகளைக் கூட எந்த நோய் தொற்றக் கூடிய சூழல் உள்ளதால் முடிந்தவரை அவசர நிலைகளைத் தவிர வீட்டிலிருந்து வெளியேறுவது மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கிராமிய குழுக்களை அந்தந்த பிரிவில் கொவிட் 19 டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தல்.

முகக்கவசமின்றி வீதியில் நடமாடுபவர்கள் இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தல். சந்தை வியாபாரிகள் வியாபார நேரத்தில் சுகாதார நடைமுறைகளை பேணுவதோடு முகக்கவசம் அணிந்திருத்தலும் அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்தலும் ஊக்குவித்தலும்.

பள்ளிவாசல்களில் கொவிட் 19 டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்து தினமும் ஒரு வேளை ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :