பாடசாலை மாணவர்களின் கிரிகெட் விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக
கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் தரம் 09,10,11 மாணவர்களிடையே அணிக்கு 06 பேர் கொண்ட "மிஸ்பாஹியன்ஸ் பிரிமியர் லீக் - 2021" கிரிகெட் சுற்றுப் போட்டியொன்று பாடசாலை உடற்கல்வி பிரிவினரால் நடாத்தப்பட்டது.
08 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (09) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் இறுதி சுற்று போட்டியில்
தரம் 09 சேர்ந்த எனிமி சாலென்ஞர்ஸ் (ENIMIES CHALLENGERS )அணியை எதிர்த்து தரம் 11 சேர்ந்த மிஸ்பாஹ் லெஜன்ஸ் (MISBAH LEGENDS) அணியினர் மோதி
மிஸ்பாஹியன்ஸ் பிரிமியர் லீக்
வெற்றி கிண்ணத்தினை
மிஸ்பாஹ் லெஜன்ஸ்
(MISBAH LEGENDS) அணியினர்
சுவிகரித்துக் கொண்டனர்.
போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக தரம் 11B ஐ சேர்ந்த ஆர்.எம்.சஹீட் என்ற மாணவனும் போட்டியின் ஆட்ட நாயகனாக தரம் 11B ஐ சேர்ந்த எம்.எல்.எம்.அஸ்லம் என்ற மாணவனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் அப்துல் ரஸாக் சேர் அவர்களும் சிறப்பு அதிதியாக பிரதி அதிபர் ஐ. எல்.எம். ஜின்னா சேர் அவர்களும் கௌரவ அதிதிகளாக வகுப்புக்களுக்கு பொறுப்பான பகுதித் தலைவர்களும் ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment