சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளிவாசலுக்கு நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த ஜனாஸா குளிப்பாட்டும் பெட் மற்றும் ஜனாஸாவை தூக்கிச் செல்லும் சந்தூக் ஆகியவற்றை கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பு வழங்கி வைத்துள்ளது.
இவற்றை அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (02) கையளித்தார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்; வை.எம்.எம்.ஏ. பேரவையின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டம் பூராவும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பு முன்னெடுத்து வருகின்ற சமூக நலத்திட்டத்தின் கீழ் மேற்படி தேவைகள் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
இம்மாவட்டத்தில் எம்மால் முடியுமான சில மனித நேயப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். சில பிரதேசங்களில் வறிய குடும்பங்களை நேரடியாக இனங்கண்டு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றோம்- எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மஸ்ஜிதுல் ஆரிபீன் நிர்வாக சபைத் தலைவர் எம்.எம்.முபாறக் மௌலவி, உப தலைவர் நௌபர்.ஏ.பாவா, செயலாளர் எச்.எம்.றியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment