சாய்ந்தமருதில் கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.!

பாறுக் ஷிஹான்-

ம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களின் தகவலின் பிரகாரம் கல்முனை பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சுமார் 65 முதல் 70 வரையிலான வயது மதிக்கத்தக்க இச்சடலம் கொலைசெய்யப்பட்டதா அல்லது இயற்கை மரணமா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தனியார் கடைதொகுதியானது தனியார் வங்கியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் மரணமடைந்தவர் காவலாளியாக நியமிக்கப்பட்டவர் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய குறித்த சடலம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய குறித்த வங்கி நிருவாகத்தின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :