சிலரின் சுயநலனுக்கான காட்டிக்கொடுப்புக்கள்



தினொரு இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சட்டத்திற்கு முரணாக யாராவது செயல்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால் இவ்வாறு மொத்தமாக தடை விதித்ததானது சிங்கள இனவாதிகள் மத்தியில் அனைத்து இஸ்லாமிய செயல்பாடுகளுக்கு எதிராக எவ்வாறான தாக்கத்தினை செலுத்தும் என்பது பற்றியும்,

இதனால் தடையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் அடையப்போகும் தாக்கங்கள் பற்றியும் எதிர்காலமே பதில் கூறும்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான பல தடைகளை விதிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அதனால் எழுந்த எதிர்ப்புக்கள் காரணமாக சில நடவடிக்கைகளை அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பு செய்வதற்கு தயங்கியது.
ஆனால் இந்த இஸ்லாமிய அமைப்புக்களை தடை விதிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள பல இயக்க வெறிபிடித்த கல்விமான்களே அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கியதன் காரணமாக வர்த்தமானி அறிவிப்பு செய்வதற்கு அரசாங்கத்திற்கு இலகுவாக அமைந்துள்ளது.

குறிப்பாக சிங்கள பிரதேசங்களில் சிங்கள சமூகத்துடன் தொழில் புரிகின்ற சிலர் தங்களது எதிர்கால வரப்பிரசாதங்களுக்காக தங்களை நல்லவர்களாகவும், சிங்கள இனவாதிகளுக்கு விசுவாசிகளாகவும் காண்பிப்பதில் முன்னிலை வகித்துள்ளார்கள்.

இவ்வாறானவர்கள் கடந்த இருபது வாரங்களுக்கு முன்பு தங்களது முகநூல்களில் பதிவிட்ட காட்டிக்கொடுப்பினையும், அவர்களது முயற்சிகளையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :