மஹிந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட காணிகள் முறையற்றது என கூறி, மீள பறிக்கப்பட்டது - அமைச்சரின் பதில் வீடியோ

மாபெரிதென்ன குடியிருப்பாளர்களுக்கு மஹிந்த ஆட்சியில் கொடுக்கப்பட்டது என கூறப்பட்ட காணிகள் முறையற்றது என கூறி, மீள பறிக்கப்பட்டது. அதற்கெதிராக நாம் வீதியில் இறங்கி போராட்டம் செய்தோம். 

அதன் விளைவாக 2017/07/07 இல் காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. 

அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்ட ஏற்புடையதாக காணி வழங்கும் அனுமதி கிடைத்தது.

எனினும் சிலர் "பழைய இடத்தை மீள பிடிப்போம்" என காணி வழங்கலை குழப்பி அடித்தனர். 

இன்று நாம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தின் படி காணி வழங்கலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை உறுதி செய்தார்.

யார் யாரும் மாபெரிதென்னைக்கு வந்து போகலாம். கலந்துரையாடினோம் என கூறலாம். பிரச்சினையை தீர்த்துவிட்டோம் என அறிக்கை விடலாம். ஆனால், அவசியமான அனைத்தையும் எமது ஆட்சியில் செய்து வைத்திருக்கின்றோம் என்பதையும், அதுவே இன்று தொடருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :