முஸ்லிம் கைதிகளுக்கு மதக்கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, வை.எம்.எம்.ஏ. வேண்டுகோள்



மினுவாங்கொடை நிருபர்-
புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக் கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வை.எம்.எம்.ஏ. பேரவையினால் மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பிலான வேண்டுகோள் விடுக்கப்பட்டு, மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஐந்து நேரத் தொழுகைகள் மற்றும் தராவீஹ், வித்ர் தொழுகைகள் உள்ளிட்ட இரவு நேரத் தொழுகைகள், விசேட துஆப் பிரார்த்தனைகள், ஸஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளுக்கான ஒழுங்குகள் போன்றவற்றை மேற்கொள்ளுமாறே, குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தேசியத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" என்ற மனிதாபிமான அடிப்படையில், முன்னைய ரமழான் காலங்களில், இவ்வாறான ரமழான் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு வசதிகள், விளக்கமறியலிலும், ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், இம்முறை ரமழானில் அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படவில்லை என, சிறைக் கைதிகளின் உறவினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளைக் கருத்திற்கொண்டே இம்மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரமழான் மாத காலப்பகுதியில் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்வதாகவும், குறித்த மகஜரில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :