பொது மக்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்



ருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் பின்வரும் தொலைபேசி / தொலைநகல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –

தொலைபேசி - 0114354550/0112354550

தொலைநகல் – 0112348855

மின்னஞ்சல் - publicaffairs@presidentsoffice.lk

ஒம்புட்ஸ்மன் அலுவலகம் -

தொலைபேசி – 0112338073

மின்னஞ்சல் - ombudsman@presidentsoffice.lk

ஜனாதிபதி நிதியம் –

தொலைபேசி – 0112354354

கிளை எண் - (4800/4814/4815/4818)

தொலைநகல் - 0112331243

மின்னஞ்சல் - fundsecretary@presidentsoffice.lk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :