கிண்ணியாவில் இன்று (26)இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்
24ம் திகதி அன்று நள்ளிரவு திடீர் என கைது செய்யப்பட்டது ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினராக வழி நடாத்தப்படாமல் முறையற்ற விதத்தில் சபாநாயகரின் அனுமதி பெறப்படாமலும் இந்த கைது இடம் பெற்றிருக்கிறது .கடந்த ஒன்றரை வருட காலமாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த நிலையில் ரிசாட் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர்கள் குற்றமற்றவர்கள் என அறிக்கைகள் வெளிவந்த போதும் கட்டுக்கடங்காத நிலையை தோற்றுவித்துள்ளனர்கள் இந்த அடாவடித்தன கைதுகளுக்கு எதிராக மூன்று நாட்களுக்குள் விடுதலையாக ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பார்க்கிர் மார்க்கார்,முஜிபுர் ரஹ்மான்,இம்ரான்,கபீர் கசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் போன்றவர்கள் அமைச்சர்களான அலி சப்ரி முன்னால் அமைச்சர் றவூப் ஹக்கீம் போன்றவர்கள் இணைந்து நாடாளுமன்றில் சபாநாயகரை உடனடியாக சந்தித்து களத்தில் நிற்க வேண்டும் கடந்த காலத்தில் கட்சி பேதமற்ற முறையில் எவ்வாறு இனக்கலவர நிலைமைகளின் போது செயற்பட்டோமோ அது போன்று செயற்பட வேண்டும் . ரிசாதின் விடுதலை என்பது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் விடுதலையாகும் .முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதித்து பிரதமர் ஜனாதிபதி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் போன்றவர்கள் செயற்பட வேண்டும் .மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது இனரீதியான கட்சி அல்ல ஆனாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சூறையாடிய சஜீத் பிரேமதாச அவர்கள் சுமார் 12 இலட்சம் வாக்குகளை பெற்று தமிழ் முஸ்லிம் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெற்றது மட்டுமல்ல தேசியப் பட்டியல் உறுப்புரிமைகளையும் அவரே பெற்றுக் கொண்டார் .எனவே தான் இப்படியாக இருந்து வருகின்ற போதும் ஐக்கிய மக்கள் சக்தி மலையக மக்கள் முண்ணனி போன்றன இணைந்து மூன்று நாட்களுக்குள்ளான விடுதலைக்காக களத்தில் நிற்க வேண்டும் .முன்னால் அமைச்சர் றிசாத் பதியூதீனிக்காக குரல் கொடுத்த றவூப் ஹக்கீம் மனோகனேசன் முஜீபுர் றஹ்மான் உள்ளிட்ட பலருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ரணில், கரு ஜெயசூரிய சஜீத் இணைந்து ஹரீன் பெர்ணாண்டோ ரஞ்சன் என்று மட்டும் நின்று விடாமல் அப்பட்டமாகவும் அடாவடித்தனமாகவும் கைது செய்யப்பட்ட றிசாதின் விடுதலைக்காக முன்னின்று மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment