திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவச குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கிண்ணியா பிரதேசத்தின் மான்சோலை,நடுஊற்று மற்றும் பூவரசன்தீவு போன்ற கிராமங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடிநீர் வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன,இன்று(20) அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இதனை கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் மேற்கொண்டு வருகின்றார்.
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பின் தங்கிய பகுதிகளிலும் உள்ள குடிநீர் வசதிகள் அற்ற குடும்பங்களுக்கே இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment