நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

J.f.காமிலா பேகம்-

டிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காசோலை மோசடி விவகாரம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”இது என்ன மாயம்” திரைப்படத்திற்காக ராடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தாததை அடுத்தே, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிறைத் தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு சரத் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :