கம்பஹா மருத்துவமனையில் நிரம்பிவழியும் நோயாளர்கள்



J.f.காமிலா பேகம்-
நாட்டில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களை கோவிட் நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களாக மாற்ற அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று கோவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக அங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலை ஒன்றை நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு வீடுகளிலேயே ஒருசில நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :