எச்.எம்.எம்.பர்ஸான்-
கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பிரதான வீதியில் வைத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிய ரக வேன் ஒன்று குறித்த பகுதியால் பயணித்துக்கொண்டிருந்த போது டயர் வெடித்ததில் வேன் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூவர் பயணம் செய்த வேனில் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மற்றைய இருவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.
இவ் விபத்தில் வேனுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment