ஊழியர்களுக்கான சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்ல அறிவித்தல்!





கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறித்த வழிகாட்டல்களை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து அரச அலுவலகங்களிலும் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வாரமொன்றுக்கு இரண்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும், மாதமொன்றுக்கு அதிக பட்சமாக எட்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விடுமுறைகள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையில் இருந்து கழிக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமான சேவைகளை முன்னெடுக்கும் அரச ஊழியர்களை, வாரமொன்றுக்கு 3 நாட்களுக்கு மேல் கடமைக்கு அழைக்க வேண்டிய தேவை காணப்படுமாயின், அது குறித்து நிறுவன தலைவர் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முறையை பின்பற்றி ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்கள் தீர்மானிக்கப்பட்ட பின்னர், அதற்கு உரிய நாளில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் மாத்திரம், அதனை அவரது விடுமுறையில் கழிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைக்கு நேரில் சமூகமளிக்காத நாட்களிலும் இணைய முறையில் கடமையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :