யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அறிய வந்துள்ளது.
பல வருடங்களாக செயற்பட்டு வரும் IVA Nursing School இல் இருந்து பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று - இன்று பிரபல்யமிக்க அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தாதியர்களாக கடமையாற்றி , மேற்படி நிறுவனத்துக்கு நற்பெயர் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையிலேயே - அந்த நற் பெயரை, தமக்கு சாதகமாக பயன்படுத்தி - இந்த போலி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"IVA Nursing School இற்கே உங்களை பயிற்சிக்காக எடுக்கிறோம் " என்று கூறி - பின்னர் தாதிய மாணவர்களை , தமது நிறுவனத்துக்கு இணைத்து கொள்கின்றனராம். இந்த விவகாரத்தில் பல மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளமை தெரிய வந்ததை அடுத்து - IVA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சித்தீக் நதீர் விசேட ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
IVA Nursing School இற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கிய சான்றிதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ சான்றிதழ் - மேற்படி எமது நிறுவன பெயரை பயன்படுத்தி தாதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை - மாணவர்கள் முதலில் அவதானிக்க வேண்டும் என - சித்தீக் நதீர் தனது அறிக்கையில் பிரதானமாக சுட்டிக்காட்டியுள்ளார்..
அத்தோடு - இவை எவையுமற்ற , இவ்வாறான நிறுவனங்களில் - தாதிய மாணவர்கள் தொடரும் ஒரு வருட கற்கை நெறி வீணாகுவதோடு - உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டில் கூட எந்தவொரு தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன் - என்றும் IVA நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சித்தீக் நதீர் - தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment