ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தேசமானிய மர்ஹும் தேசமானிய M.A.C.A. றஹ்மான் மற்றும் Dr. அஹமட் பரீட் மீராலெப்பை அவர்களின் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று (13) மிக விமர்சையாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான நஸீர் அஹமட் அவர்களும் ஏனைய விஷேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசில்களும், ஞாபகார்த்த கிண்ணங்களும் பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment