றிசாத்துக்கு ஆதரவாக கல்முனை மாநகர சபையில் கறுப்பு சால்வை போராட்டம்.



நூருள் ஹுதா உமர்-
ண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கறுப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டினர்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (28) மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப்பின் தலைமையில் கூடிய போதே இவ்வெதிர்ப்பை வெளிக்காட்டினர். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பீ. எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப், எ.சீ.எம். முபீத், ஏ.ஆர். பஸீரா, ஏ.சமீனா ஆகியோர் சால்வை அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் முதல்வர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் கறுப்பு பட்டி அணிந்து கைதுக்கு எதிரான மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்திற்க்கு தமது ஆதரவை வெளிக்காட்டினர்.

கைது தொடர்பிலான கண்டன உரைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம். முபீத், பி.எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப் ஆகியோர் நிகழ்த்தினர். மேலும் முதல்வர் உட்பட பல உறுப்பினர்களும், விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது கண்டனங்களை தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :