சம்மாந்துறையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்



எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச சபை பிரதேசத்திலுள்ள 10 வட்டாரங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தும் கூட்டம் சம்மாந்துறை பிரதேச தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

உள்ளுராட்சித் துறையிலுள்ள வளங்களை வலுவூட்டுவதன் மூலம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் கூடிய முறையில் திட்டத்தினை வழிநடத்தி மாகாணங்களுக்கு ஒத்துழைப்புகள் வழங்குதல் மற்றும் அப்பிரதேசங்களின் பொருளாதார அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவையாற்றுதல் எனும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் , பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு பற்றலுடனான அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்காக பிரதேசத்திலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னுரிமையடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :