2021 ஆம் ஆண்டு நடைபெற்ற SPL _ session 3 கிரிக்கெட் மென்பந்து இறுதிப் போட்டி சிராஜ் நகர் பாடசாலை மைதானத்தில் (02)நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கி வரும் சிராஜ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
அணிக்கு 11 பேர்கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டியில் மொத்தமாக ஐந்து அணிகள் பங்குபற்றின.
இவ்விறுதிப் போட்டியில் சிராஜ் B மற்றும் சிராஜ் A ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடின..
இப்போட்டியில் சிராஜ் விளையாட்டு கழக A அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று; வெற்றிக் கிண்ணத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டனர் .
வெற்றியீட்டிய அணியினருக்கு கேடயங்களும் இதன் போது வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment