பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!



ஊடகப்பிரிவு-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று (29) மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த, போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிஹான் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக, நேற்று வவுனியாலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :