மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வீதியில் பயணம் செய்வோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள்!



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
கொவிட்-19 கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கென அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வீதியில் பயணம் செய்வோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக ஏறாவூர்ப் பொலிஸார் பிரதான வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.
ஏறாவூர் பொலிஸாரினால் 250 வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 29 பேர் எச்சரிக்கப்பட்டதுடன் 28 பேருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி . ஜயந்த தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலைப் பின்பற்றாது பலர் முகக்கவசங்கள் அணியாது வீதியில் பயணித்தாகவும் மேலும் சிலர் முகக்கவசங்களை உரியமுறைப்படி அணியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் குழுவினர் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் திடீர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :