எம்.எஸ்.எம்.ஸாகிர்-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு விநியோகிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட 267 பேரீச்சம் பழப் பெட்டிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று (08) வியாழக்கிழமை இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றிபாஸின்
ஏற்பாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் இப் பேரீச்சம் பழப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து பேரீத்தம் பழங்களை அன்பளிப்புச் செய்த சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களுக்கும் மக்கள் சார்பாக தான் நன்றி தெரிவிப்பதாக றிஸ்வி முஸ்தபா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment