யார் ஆட்சிக்கு வந்தாலும் மண் மாபியாக்கள் தீர்ந்தபாடில்லை



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ந்த அரசாங்கம் ஆட்சிக்கு மாறி மாறி வந்தாலும் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் மண் மாபியாக்கள் தீர்ந்தபாடில்லை என திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று(28) தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

மண் அகழ்வு பிரச்சினை பாரிய பிரச்சினையாக திருகோணமலையில் உருவெடுத்துள்ளது சொந்த மாவட்ட மக்களுக்கு மண் அனுமதிப் பத்திரம் வழங்காமல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே அதிகமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு மண் வளங்கள் சுரண்டப்படுவதுடன் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
கொழும்பு ,வவுனியா,அநுராதபுரம் உள்ளிட்ட இதர மாவட்டங்களுக்கு மண் ஏற்றுமதியால் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் சுமார் 30000 ரூபா அளவில் ஒரு டிப்பர் மண் விலை அதிகரித்து செல்கிறது திருகோணமலை மண் வளத்தை முழுக்க முழுக்க வெளி மாவட்ட மண் மாபியாக்களே அனுபவிக்கிறது

இங்குள்ளவர்களுக்கு 20000 ரூபா அளவில் மண் வழங்கப்பட வேண்டும் ஆனாலும் 30000 ரூபாவுக்கே வழங்கப்படுகிறது இதற்கு அரச அதிகாரிகளே உடைந்தையாளர்களாக உள்ளார்கள் அவர்களின் உறவினர்களுக்கு இலகுவாக மண் ஏற்றுமதி அகழ்வுக்கான அனுமதியினை இலகுவாக பெற்றுக் கொடுக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்துக்கு அநீதி தொடர்ந்தும் இதன் ஊடாக இழைக்கப்படுமானால் வீதியில் இறங்கி போராடத் தயாராகவுள்ளோம் இனி பார்த்துக் கொண்டிருக்க முடியாது

எமது வர்த்தகர்களின் வரிப்பணம் மூலமாக நாட்டின் பொருளாதார நிலையில் பாரிய பங்கு வகிக்கின்ற போதும் தங்களுக்கான திட்டங்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படுவதில்லை கிழக்கு மாகாண சபை காலத்தில் ஒன்றினைந்து பல திட்டங்களுடாக செயற்பட்டோம் தற்போது ஆளுனரின் கீழ் அதிகாரம் குவிக்கப்பட்டதால் ஆளுனரை சந்திப்பதற்காக பல முறை முயற்சித்த போதும் அது கைகூடவில்லை .
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கல் குவாரி மண் அகழ்வு கொந்தராத்து என பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது கொந்தராத்தில் வழங்கப்பட வேண்டிய சுமார் 350 மில்லியன் பணம் வழங்கப்படாமை இருக்கிறது ஆட்சி மாற்றத்தால் இப்படியாக காலம் காலமாக நிறம் மட்டுமே மாறுகிறது தங்களுக்கான நிலுவை தொகை கிடைக்கவில்லை .
இப்படியாக நாங்கள் வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறோம் வங்கிகளினாலும் சில நடைமுறைகள் வழங்கப்பட்ட போதிலும் அதனை மத்திய வங்கி மூலமாக அனுமதிக்கப்பட்ட போதிலும் கிளை வங்கிகள் அதனை திறம்பட செய்யாமல் ஏமாற்றத்துடன் பயணிக்கிறோம் .

அரச ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் கிடைக்கும் வர்த்தகர்கள் வரி என்ற சுமையே தாங்கித் தான் ஆக வேண்டும். அரசின் மூலமாக காணப்படுகின்ற பப்லிக் பிரைவட் பார்ட்னர் என்ற நிலை இருந்தாலும் அது பேச்சளவில் மட்டுமே நடை முறையில் இன்மையால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டு எந்தவித அபிவிருத்திகளும் இல்லை நாங்கள் இணைந்து செயலாற்ற இருக்கிறோம் தீர்க்கமான இறுதி முடிவுகளை தாருங்கள் என சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு இதனை முன்வைப்பதாக மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :