திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் பொது மக்களுக்கு விடுக்கும் அறிவிப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ முபாரக் அப்பகுதி பொது மக்களுக்கு கொவிட் தொடர்பாக முக்கய அறிவித்தலொன்றினை இன்று(28) வெளியிட்டுள்ளார்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது covid-19 என்கின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மேலும் தற்போது முஸ்லிம்களுக்காக புனித ரமழான் மாதம் வந்தடைந்து இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பொது மக்களாகிய நாங்கள் நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மிகவும் அவதானமாக செயல்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோம். இதனடிப்படையில் குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தென்னமரவாடி, புல்மோட்டை, திரியாய்,புடவைக்கட்டு, குச்சவெளி,கும்புறுப்பிட்டி,இறக்கக்கண்டி, நிலாவெளி,இக்பால் நகர், பெரிய குளம் வரையே உள்ள மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எமது குச்சவெளி பிரதேசத்தில் இதுவரையில் எமது பகுதியில் குறைவான வைரஸ் தாக்கம் தான் காணப்படுகின்றது இருந்தும் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம் எங்களின் கவனயீனம் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க நேரிடும்.

ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் அத்தியவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்காக வெளியில் செல்ல வேண்டும் அதை விடுத்து
பெருநாளை முன்னிட்டு ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் தேவை இல்லாமல் அலைந்து திரிவதை முற்றாக தவிர்க்க வேண்டும். அத்துடன் நாட்டின் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் மேலும் தற்போது நாட்டில் நடைபெறுகின்ற நிலைமையினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய முக்கிய கடப்பாடு உங்களிடமே காணப்படுகிறது.
ஆகவே எமது சமூகத்தின் நலன் கருதி சுகாதார துறையினரால் கடைபிடிக்க சொல்லுகின்ற அனைத்து விடயங்களையும் கவனமாக சிந்தித்து செயலாற்றவும் அத்துடன் தேவையற்ற கூட்டங்கள், வீதியில் ஒன்று கூடல், இப்தார் நிகழ்ச்சிகள், வீண் விளையாட்டுக்கள், பெண்கள் வெளியில் வருதல் போன்ற விடயங்களை முற்றாக தவிர்த்தல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நாம் வாழுகின்ற இதே பிரதேசத்தில் சகோதர மத சொந்தங்கள் அவர்களுடைய பெருநாட்களை தியாகத்துடனும், சிறந்த சிந்தனைகளுடனும் அமைதியாக கழித்த விடயங்களை கருத்தில் கொண்டு நாமும் செயல்பட வேண்டும்
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட வியாபார நிலைய உரிமையாளர்கள் இலாப நோக்கினை தூரவைத்து விட்டு சமூக நோக்கு, மக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களுடன் செயல்பட வேண்டும்.

விளையாட்டு கழகங்கள், சமூக நிறுவனங்கள், ஊடகவியாளர்கள், இளைஞர்கள் மிகவும் பொறுப்புடனும் அவதானமாகவும் முன்னின்று நமது சமூகத்தை அவதானித்துக் கொள்ள வேண்டும். பிழைகள் ஏதும் இடம்பெற்றால் தீர்க்கமாகவும், சிந்தித்தும் செயல்பட வேண்டும்.

இந்தப் பெருநாளை இருக்கின்ற சிறந்த ஆடைகளை பயன்படுத்தி மிகவும் எளிமையாக கொண்டாடுவோம்! இதை சிறப்பாக கடைபிடித்தால் அடுத்த ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடலாம்.மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாருக்காவது உதவிகள் ஏதாவது தேவைப்பட்டால் எந்நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :