பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு- ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி !

ஞ்சாவூர் :தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ”ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு” மற்றும் ”ரமலானை வரவேற்போம்” நிகழ்ச்சி ஏப்ரல் - 10 அன்று அதிராம்பட்டிணம் கதிஜா மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டிணம் நகர் தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் மர்சூக் அஹமது, மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது தம்பி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா, திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகம்மது அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி ஆம்புலன்ஸை மக்களின் சேவைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இறுதியாக நகர் செயலாளர் சம்சுதீன் நன்றி உரையாற்றினார். இதில் பெண்கள், பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :