கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் அரசு உறுதி செய்ய வேண்டும்!

தி
ண்டுக்கல் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநில துணைத் தலைவர் காலித் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்த தீர்மானத்தில், கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடும் துன்பத்திற்கு உள்ளான ஏழை எளிய மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை தவிர வேறு எதுவும் மத்திய மோடி அரசு வழங்கவில்லை.

 மாநில அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அபராதத்தை வசூலிப்பதில் அக்கறையை காட்டியதே தவிர மக்களின் அன்றாட தேவைகளுக்கான எந்த மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எனவே தற்போது கொரோனா இரண்டாம் அலையை மையப்படுத்தி மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து, மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற தொடர் தாக்குதலுக்கு உள்ளான சிறு,குறு வணிக நிறுவனங்கள் மிகப் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கின்ற கட்டுப்பாடுகள் சிறு வணிகத்தை மீள முடியாத வீழ்ச்சியில் தள்ளிவிடும் சூழல் உருவாகி விடும். எனவே, தமிழக அரசு பெரு வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை போல் சிறு வணிக நிறுவனங்களுக்கும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் மாநில செயற்குழு நியமன உறுப்பினர்களாக நெல்லை ஏர்வாடியை சேர்ந்த ரியாஸ் அஹமது, சென்னையை சேர்ந்த முஹம்மது ரபீக் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :