அசாமில் நிலநடுக்கம்



ந்திய மாநிலமான அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று புதன்கிழமை காலை 7.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவானதாக இந்திய தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்கள், மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள், பூடான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.. நிலநடுக்கத்தால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது தொடர்பான புகைப்படங்களை அங்குள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்..

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அசாம் மக்கள் நலமுடன் இருக்க பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :