இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவின் தலைவர் டெனிஸ் சைபிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு



லங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவின் தலைவர் டெனிஸ் சைபி(Denise Chaibi),க்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பென்று இன்று(27) காலை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில்,பிரான்சின் தூதர் திரு, எரிக் லாவெர்டு(Eric Lavertu)இத்தாலியின் தூதர் திருமதி. ரீட்டா கியுலியானா மன்னெல்லா(Rita Giuliana Mannella), ஜெர்மனியின் தூதர் திரு,ஹோல்கர் சியூபர்ட்(Holger Seubert), ருமேனியாவின் தூதர் திரு, விக்டர் சியுஜ்தியா(Victor Chiujdea) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய கொரோனா பேரழிவை எதிர்கொண்டு உலகம் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடி நிலைமை மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் இணையான நிலைமை மற்றும் இந்த பேரழிவை நிர்வகிப்பதில் உள்ள பலவீனங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கம் எடுத்த அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்தும், எதிர்க்கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும் அதை எவ்வாறு கையாள்வது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மனித, சிவில், பொருளாதார, சமூக, அரசியல், மத மற்றும் கலாச்சார உரிமைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், நாட்டின் மாற்று அரசாங்கமாக ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி அந்த உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :